மைக்ரோசாப்ட் ஆபிஸ் – 2010
ADVERTISEMENTமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தயாரிப்பான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 இன்று அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 வெளிவரும் தேதி குறிப்பிட்டிருந்தாலும்.
இன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்டின் தயாரிப்பில் ஆபிஸ் மிகவும் வெற்றியடைந்த மென்பொருள் அது மட்டும் இல்லாமல் பல நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேலைகளை எளிதாக முடிக்க மிகவும் உதவும் மென்பொருள்.

மைக்ரோசாப்ட் வணிக தலைவர் ஸ்டீபன் லொப் ஆபிஸ் 2010, ஷர்பாயிண்ட் 2010, விசியோ 2010 மற்றும் ப்ராஜக்ட் 2010 ஆகிய நான்கு மென்பொருள்களை வெளியிட்டார்.
என்ன தான் இலவச மென்பொருள்கள் வணிக மென்ம்பொருள்களின் இடத்தை பிடிக்க முயன்றாலும் அதற்க்குள் புதிய வணிக மென்பொருள்களின் ஆக்கம் (version) வந்துவிடும்.



