| Mobile | RSS

விண்டோஸ் 7 புதுப்பித்தல் ஆலோசகர்

May 9th, 2009 | 2 Comments | Posted in ஆலோசனைகள், மென்பொருள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 RC ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் உங்கள் கணினி விண்டோஸ் 7ஐ நிறுவ ஏற்றதா ? என்று எவ்வாறு சோதிப்பது ? பலர் தங்கள் கணினியை இன்னும் விண்டோஸ் XPயின் வடிவமைப்பை வைத்துள்ளனர்.
இப்படி இருக்க என்ன என்ன வன்பொருள் தேவைகளை மாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் Windows 7 Upgrade Advisor Beta என்ற நிரலை தருகிறது, இதை நிறுவி உங்கள் கணினியின் எந்த எந்த வன்பொருள் மற்றும் இயக்கிகளை விண்டோஸ் 7 ஏற்றுக் கொள்ளும் என்ற பட்டியலை காட்டுகிறது அது மட்டும் இல்லாமல் எந்த எந்த வன்பொருள் மற்றும் இயக்கிகளை(drivers) புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்ற தகவலையும் தருகிறது. இதனால் நாம் யாரிடமும் சென்று விண்டோஸ் 7 வடிவமைப்பு பற்றி கேட்க வேண்டியதில்லை.

Windows 7 Upgrade Advisor Beta தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Windows 7 Upgrade Advisor Beta



Windows 7 Upgrade Advisor Beta

Windows 7 Upgrade Advisor Beta

குறிப்பு : இந்த மென்பொருளை நிறுவி இயங்க வைக்க உங்களிடம் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் XP SP2 இருக்க வேண்டும்,நீங்கள் விண்டோஸ் XP வைத்திருந்தால் .NET 2.0 Framework or higher நிறுவி இருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த Windows 7 Upgrade Advisor Beta இயங்கும்.

Leave a Reply 588 views, 1 so far today |
Follow Discussion

2 Responses to “விண்டோஸ் 7 புதுப்பித்தல் ஆலோசகர்”

  1. kirukkan Says:

    ungkal
    kadduraikaLil niingkal payanpaduththum thamil vaarththaikalukkaaha valththukkal.

  2. கார்த்திகேயன் Says:

    நன்றி கிருக்கன் அவர்களே !




© 2008 - 2010 Tamil Tech Information.