| Mobile | RSS

வந்துவிட்டது விண்டோஸ் 7 RC

May 6th, 2009 | No Comments | Posted in இறக்குதல், தொழில்நுட்ப செய்திகள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.

வந்துவிட்டது விண்டோஸ் 7 RC



குறிப்பு : விண்டோஸ் 7 RC பயணாளர்கள் சோதித்து பார்க்க வெளியிடப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் விண்டோஸ் 7 RC க்கு 1 வருடம் இலவச உரிமம் வழங்கப்படுகிறது. இந்த மாதம் முதல் ஜுன் 1, 2010 வரை இலவச உரிமம் தரப்படுகிறது. அதன் பின்னும் விண்டோஸ் 7 RC உபயோகித்தால் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை உங்கள் கணினி Restart ஆகும் அதனால் அதற்க்குள் உங்கள் விண்டோஸ் 7 RCயை விண்டோஸ் 7க்கு மாற்றிவிடுங்கள். விண்டோஸ் 7 பயன்படுத்தும் போது நீங்கள் விண்டோஸ் XP mode என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இந்த வசதி பழைய விண்டோஸ் XP யை virtual முறையில் இயங்க வைக்கும். இதனால் பழைய விண்டோஸ் XP நிரல்களை தங்கு தடையின்றி விண்டோஸ் 7ல் இயக்கலாம்.

குறிப்பு : விண்டோஸ் 7 RC தரவிறக்கம் ஜுலை 2009 இருக்கும் அதனால் torrent அல்லது file sharing போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்யாதீர்கள் இதில் வைரஸ் வர வாய்ப்புகள் அதிகம்.

விண்டோஸ் 7 RC கணினி வன்பொருள் தேவைகள்

  • 1 GHz or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  • 1 GB RAM (32-bit) / 2 GB RAM (64-bit)
  • 16 GB available disk space (32-bit) / 20 GB (64-bit)
  • DirectX 9 graphics processor with WDDM 1.0 or higher driver

விண்டோஸ் 7 RC தரவிறக்கம் செய்துகொள்ள இங்கே சொடுக்கவும்

Leave a Reply 739 views, 1 so far today |

Comments are closed.




© 2008 - 2010 Tamil Tech Information.