Tamil Radio Gadget Version 2.0
ADVERTISEMENTகடந்த வருடம் ஏதோ விளையாட்டுத் தனமாக தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 1.0 என்று உருவாக்கி தமிழிஷில் முதல் முறையாக நான் சொடுக்கை சேர்த்தேன், பிறகு தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 1.0 பிரபலம் அடைந்தது.
தமிழ் ரேடியோ கட்ஜட் பயனாளர்கள் சில முக்கிய வசதிகள் வேண்டும் என்று பின்னோட்டம் எழுதியும், மின்னஞ்சலும் அனுப்பியிருந்தனர் அவர்களின் தேவைக்கேற்ப தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 2.0 தயாரித்துள்ளேன். இந்த பதிவில் தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 2.0 அம்சங்களை பற்றி விவரிக்கவுள்ளேன்.
தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 2.0 ல் Display Settings மற்றும் Gadget Settingsஎன்ற இரண்டு அமைப்புகள் உள்ளன.
Display Settings: இந்த அமைப்பில் தமிழ் ரேடியோ கட்ஜட் (Tamil Radio Gadget) என்ற பெயருக்கு பதிலாக உங்கள் பெயரை வைத்துக்கொள்ளலாம். Width & Height இந்த இரண்டு அமைப்புகளும் உங்கள் கட்ஜடின் அகலம் மற்றும் நீளத்தின் அளவை குறிக்கும்.
Gadget Settings: இந்த அமைப்பில் Auto Play என்ற அமைப்பு உங்களின் தளம்/வலைப்பதிவு திறந்த்தவுடன் பாடல்களை பாட true என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும், இல்லையென்றால் false என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும்.
Player Height & Player Width: இந்த அமைப்புகள் ஊடக இயக்கின் (media player)ன் அகலம் மற்றும் நீலத்தின் அளவை நிர்ணயம் செய்கிறது.
Player BG Color : இந்த அமைப்பு உங்களின் வலைப்பதிவு/தளத்தின் பின்புற நிறத்திற்க்கு ஏற்ப தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 2.0 அமைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு: உங்களுக்கு தெரிந்த ரேடியோ அல்லது உங்கள் ரேடியோ தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 2.0ல் சேர்க்கப்படவில்லை என்றால் உங்களின் Stream URL, Radio Name, Country ஆகிய தகவல்களை tamilonline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் கருத்துக்களையும் tamilonline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.





June 15th, 2009 at 9:13 pm
hi super plz add suryan fm r radio mechi………..
June 15th, 2009 at 9:19 pm
I think Suryan FM stream is not left for Public
June 16th, 2009 at 5:42 am
plz add vertri FM Srilanka
June 16th, 2009 at 5:45 am
Vettri FM is already there check it properly!
June 16th, 2009 at 1:08 pm
உங்களுக்கு நன்றிகள் பல பல…
June 16th, 2009 at 2:51 pm
நன்றி தாம்ஸ் ரூபன்