எக்ஸ் பாக்ஸ் 360ல் – திட்டபணி நாடல்
ADVERTISEMENTஇந்த பதிவின் தலைப்பை பார்த்து என்ன திட்டம் என்று அலச வேண்டாம் ஆங்கிலத்தில் (Project Natal) என்பதை திட்டபணி நாடல் என்று எழுதியுள்ளேன். மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டபணி நாடல் (Project Natal) என்ற புதிய நுட்பத்தை Xbox 360ல் செயல்படுத்த தயாராகி வருகிறது.
சரி Xbox 360 என்றால் என்ன ?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே எக்ஸ் பாக்ஸ் 360ஆகும். (நன்றி தமிழ் விக்கீபீடியா) மேலும் எக்ஸ் பாக்ஸ் 360 பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
என்ன தான் கூகிள் இணையத்தில் ராஜாவாக இருந்ததாலும் மென் ஒருங்கில் (software application) மைக்ரோசாப்ட்டுடன் போட்டி போடாதது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. திட்டபணி நாடல் உணர்வீ பட்டை(sensor bar) மூலமாக இயங்குகிறது, இந்த உணர்வீ பட்டை மனிதர்களின் அசைவுகள், உணர்ச்சி வேகம் மற்றும் முகபாவத்தை முப் பரிமாணத்தில் அறிந்து கொள்கிறது.

இந்த திட்டபணி நாடல் மூலமாக ஒருவர் விளையாட்டுக் கட்டுபாடு இயந்திரம்(Game Controller) இல்லாமல் நம் உடலின் அசைவுகள், உணர்ச்சி வேகம் மற்றும் முகபாவத்தை வைத்தே விளையாடலாம்.
நிகழ்படம் : நாடல் Xbox 360
மேலும் திட்டபணி நாடலின் உதவியுடன் Xbox 360 மூலமாக நேரடியாக உங்கள் நண்பர்களிடம் நிகழ்படத்தில் உரையாடலாம்.
அது மட்டும் இல்லாமல் படம் அல்லது நாடகங்களை தொலைக்காட்ச்சியில் பார்க்கும் போது இனி தொலைக் கட்டுப்பாடுக் கருவி (Remote Control) தேவை இல்லை, நம் உடலின் அசைவுகள், உணர்ச்சி வேகம் மற்றும் முகபாவத்தை வைத்தே வேறு படங்கள் அல்லது வேறு அலைவரிசைக்கு (Channelக்கு) செல்லலாம்.



