| Mobile | RSS

செல்போனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு

April 2nd, 2009 | No Comments | Posted in தொழில்நுட்ப செய்திகள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


இன்றைய நவீன யுகத்தில் தடுக்கி விழுந்தால் எதாவது ஒரு தொழில்நுட்பத்தில்தான் விழ நேரிடுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர்.

Mobile TV

Mobile TV



பின்னர் டிஷ் ஆண்டெனா (dish antenna), கேபிள் டிவி வந்தது. இப்போது டிடிஎச் (DTH) வந்து அசத்துகிறது – விலையும் மிகமிகக் குறைந்துவிட்டது.

தொழில்நுட்பத்தின் தேடுதல் வேட்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதன் விளைவால் இப்போது செல்பேசி (cell phone) கருவியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

இதற்கு மொபைல் டிவி (Mobile TV) எனப் பெயர்.

ஒரு பட்டனை செல்போனில் அழுத்தினால் உடனே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செல்போன் திரையில் உடனடியாகக் காட்சியளிக்கிறது.

அடுத்தடுத்த சேனல்களை மாற்றுவதோ, முழுநீளத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதோ எளிது.

எதையுமே இதற்காக இணையிறக்கம் (download) செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

தளமுகவரி : http://www.flotv.com

Leave a Reply 471 views, 2 so far today |
Tags:
  • No Related Post

Comments are closed.




© 2008 - 2010 Tamil Tech Information.