மைக்ரோசாப்ட் பிங்க் புதிய தீர்வு பொறி
ADVERTISEMENTமைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய வகை தேடு பொறியை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் பெயர் பிங்க் ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை ஒரு தீர்வு பொறி (Decision Engine) என்று அறிமுகப்படுத்தியுள்ளது . ஆனால் இந்த தேடு பொறிக்கும் தீர்வு பொறிக்கும் என்ன வித்தியாசம் என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுந்திருக்கும்.

தேடு பொறிக்கும் தீர்வு பொறிக்கும் நூலளவில் தான் வித்தியாசம்.
தேடு பொறி : என்றால் நீங்கள் கொடுக்கும் வசங்களுக்கு முடிவுகளை தேடி கொடுக்கும்.
தீர்வு பொறி : என்றால் நீங்கள் கொடுக்கும் வசகங்களுக்கு பதிலை தேடி தரும் என்பது பொருள். மைக்ரோசாப்ட் நிறுவனம் தேடு பொறி என்பதை தீர்வு பொறி என்று பெயரை திரித்து கூறியுள்ளது. இதற்க்கு பல காரணங்கள் உண்டு தனது போட்டி நிறுவனமான கூகிளை விட ஒரு படி மேலே உள்ளோம் என்று பயனாளர்களுக்கு சொல்லாமல் சொல்லி காட்டியுள்ளது.
புதிய பிங்க் தீர்வு பொறியின் அம்சங்கள்
சுருக்கு எழுத்து (Summary Text) பிங்க் தீர்வு பொறி அருமையான சுருக்கு எழுத்து வசதியை கொடுத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் தேடிய முடிவுகளுடன் கிழே காண்பிக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் சுருக்கமான எழுத்துகளுடன் முக்கியமான சுட்டிகளையும் காண்பிக்கும். 
தொடர்புடைய தேடல்கள் (Related Searches)
இந்த வசதி கூகிள் தேடு பொறியில் உள்ள அம்சங்களில் இதுவும் ஒன்று நீங்கள் தேடின தேடல்களுக்கு தொடர்புடைய முடிவுகளை கொடுக்கும்.

நீங்கள் தேடிய சொற்களுக்கு தனி RSS ஓடை
நீங்கள் தேடிய சொற்களுக்கு பிங்க் தானகவே RSS ஓடை தயாரித்து கொடுக்கும் இதன் மூலம் உங்கள் கூகிள் ரீடர் அல்லது வேறு நிறுவனங்களின் ரீடர் மூலம் சந்தாதாரராகிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தேடுதலின் முடிவில் உள்ள URL லில் &format=rss சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு RSS ஓடை கிடைக்கும்.
எ.டுகா : http://www.bing.com/search?q=தமிழ்&format=rss
சிறந்த இணை மற்றும் முன்னேற்றம் அடைந்த தேடல்கள் (Best Match and Advanced Search)
பிங்க் தீர்வு பொறி நீங்கள் தேடும் சொற்களுக்கு சிறந்த இணை மற்றும் முன்னேற்றம் அடைந்த தேடல்களை தேட வாய்புகளை கொடுக்கும்

தேடிய முடிவுகளை சேமித்துக் கொள்ளலாம்
பிங்க் தீர்வு பொறி நீங்கள் தேடியவற்றை சேமித்து வைக்கவும் உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள வழி வகை செய்கிறது.
நிகழ்படத்தை தேடலாம்
கூகிளை போலவே பிங்க் தீர்வு பொறியில் நீங்கள் நிகழ்படத்தை தேடலாம் ஆனால் கூகிள் நிகழ்படத் தேடலை விட பிங்க் நிகழ்படத் தேடல் மிக அருமையான வசதியை கொண்டுள்ளது. நீங்கள் தேடிய நிகழ்படத்துக்கு மேலே சுட்டியை வைத்தால் தானகவே நிகழ்படம் திரையில் சிறியதாக ஓடும். அது மட்டும் இல்லாமல் நிகழ்பட்ங்களை நீளம், திரை அளவு, பிரிதரன், மூலம் போன்ற அம்சங்களை வைத்து தேடலாம்.

X- Rank
இந்த X-Rank என்ற சேவையில் உள்ளுரில் உள்ள முதல் 10 பிரபலங்களை பிரிவு வாரியாக கொடுக்கப்பட்டிருக்கும்.

படிமம் தேடுதல் (Image search)
கூகிளை போலவே பிங்க் தீர்வு பொறியில் நீங்கள் படிமத்தை தேடலாம் ஆனால் கூகிள் படிமத் தேடலை விட பிங்க் படிமத் தேடல் மிக அருமையான வசதியை கொண்டுள்ளது.

படிமங்களை அளவு, வடிவமைப்பு, நிறம், நடை, மக்கள் போன்ற அம்சங்களை வைத்து தேடலாம்.
பிங்க் வரைபடம்
பிங்க் வரைப்டம் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்கு செல்ல சிறந்த வழி போன்ற தகவல்களை கொடுக்கும்.
பிங்க் கொள்வனவு (Bing Shopping)
பிங்க் தீர்வு பொறி ஒரு தேடு பொறி மட்டும் அல்ல பிங்கில் நீங்கள் பொருட்களையும் வாங்கலாம் அதற்கென தனியாக Bing Shopping என்ற தளம் உள்ளது.




June 2nd, 2009 at 10:13 pm
தெளிவா எழுதி இருக்கீங்க
June 2nd, 2009 at 10:25 pm
நன்றி தலை
June 9th, 2009 at 10:57 pm
I want to find good pop music. Help me please.