பெரிய அளவுள்ள கோப்புகளைத் துண்டு துண்டுகளாக்க
ADVERTISEMENTநேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.
ஆனால் டிவிடி வட்டின் (DVD Disk) கொள்ளளவோ 4.7 GB தான். அதில் வழக்கமாக அதிகபட்சமாக 4.37GB வரைதான் நான் எழுதுவேன்.
11GB அளவுள்ள பெரிய கோப்பு (large file) அதுவும் ஒரே கோப்பாக உள்ளதை எப்படி DVDல் ஏற்றுவது? இதற்காக ஏதேனும் துண்டாக்கும் (splitter) மென்பொருட்கள் உள்ளனவா என இணையத்தில் தேடினேன்.
GSPlit என்கிற மென்பொருள் கிடைத்தது. இதன் உதவியுடன் மிக எளிதாக 3 கூறுகளாக ஆக்கினேன். மூன்று கூறுகளையும் தனித்தனி டிவிடிகளில் எழுதி பாதுகாப்பாக வைத்துவிட்டேன். இது ஒரு இலவச மென்பொருள் (freeware).
பல்லூடகங்களான (Multi media) இசை, பாட்டு, காணொளி (video), படங்கள், மிகப்பெரிய அளவிலான கோப்புகள் போன்றவற்றை சுக்குச்சுக்காக துண்டுதுண்டாக ஆக்கி டிவிடிகளில் ஏற்றுவதற்கு அருமையான இலவச மென்பொருள் இது என்றால் மிகையில்லை.
இப்படித் துண்டாக்கிய கோப்புகளை CD, DVD, USB, Zip Disk மற்றும் mobile phone களில் ஏற்றிக்கொள்ளலாம்.கோப்புப் பகிர்வான் (file sharing sites) தளங்களில் ஏற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். தரவிறக்கம் (download) செய்ய கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.
சுட்டி : http://www.gdgsoft.com/gsplit/index.aspx
வந்த பாதை : mynameisideal





April 6th, 2009 at 10:01 pm
நல்ல பதிவு…வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்.
April 6th, 2009 at 10:16 pm
Thanks to : வேலன்
April 7th, 2009 at 3:19 pm
itharkku neengal WINRAR payanpadithinale pothume
alagaga pirithu vidume
April 7th, 2009 at 5:04 pm
வணக்கம் வேலன் அவர்களே,
உங்களுக்கு தமிழிலேயெப் பின்னூட்டம் போடலாமென்று நினைப்பேன் ஆனால் நேரப்ப்ற்றாகுறையால் ஆங்கிலெத்திலேயேப் பின்னூட்டமிடுவேன்
சரி,இந்த பதிவைப் பொறுத்தவரை எனக்கும் அதே பிரட்ச்சனைதான்
டொர்ரெண்ட் மூலம் தரவிறக்கம் செய்த படங்களை எப்படி டிவிடியில்(4.5ஜிஒ) ஏற்றுவது என்று.வேடிக்கை என்னவென்றால் என்னிடம் dvd cutterருமுண்டு gsplit பற்றியும் எனக்கு தெரியும்.ஆனால் இந்த வெட்டி ஏற்றும் ஐடியா மட்டும் என் மரமண்டைக்கு ஃபிலாஷாகவில்லை.உங்கள் தயவால் அது நிறைவேறிற்று
மிக்க நன்றி,,,, வாழ்த்துகள்
April 7th, 2009 at 8:43 pm
WinRAR என்பது இலவச மென்பொருள் இல்லை. அது shareware product.
இப்போது சொல்லுங்கள்.
//itharkku neengal WINRAR payanpadithinale pothume
alagaga pirithu vidume