கூகிள் சதுக்கங்கள்
ADVERTISEMENTகூகிள் சதுக்கங்கள்(Google Squared) கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தேடுதல் உத்தி (Search Technique) என்ன தான் மைக்ரோசப்ட் முயற்ச்சி செய்து புதுசு புதுசா பெயரை மாற்றி தேடு பொறிகளை (தீர்வு பொறி) அறிமுகப்படுத்தினாலும் கூகிளின் அபார தேடுதல் உத்தியின் செயல் திறனை பிடிக்க முடியவில்லை. பிங்க் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலே கூகிள் சதுக்கங்கள் பரிசோதனைக்கு வந்து விட்டது.
இவ் வலைப்பூவில் கூகிள் சதுக்கங்கள் பற்றி எழுதுவதற்க்கு முன்பே பலர் இதை பற்றி எழுதி விட்டனர் அதனால் அதிகம் இதை பற்றி விவரிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் .

அதனால் கூகிள் சதுக்கத்தை எவ்வாறு பயனுள்ளதாக உபயோகபடுத்தலாம் என்று பார்ப்போம். நீங்கள் ஒரு விலை உயர்ந்த NOKIA கைபேசியை வாங்க நினைக்குறீர்கள் ஆனால் உங்களுக்கு NOKIA கைபேசியின் மாடல்கள் மற்றும் அவற்றின் அம்சங்களை பற்றி தெரியவில்லை. இவை அனைத்தையும் கூகிள் சதுக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலே காண்பிக்கப்பட்ட படத்தை போல கூகிள் சதுக்கங்கள் நீங்கள் தேடிய சொற்களுக்கு தேடுதல் முடிவுகளை பெட்டியில் அழகாக காண்பிக்கும். அது மட்டும் இல்லாமல் அவற்றின் அம்சங்களை அழகாக எடுத்து காண்பிக்கும்.
பலர் கைபேசி வாங்கும் போது சில முக்கிய அம்சங்களை எதிர்பார்ப்பர் (எ.டு.கா) Bluetooth இந்த வசதி நீங்கள் வாங்க போகும் கைபேசியில் இருக்குமா என்று கூட தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் அவற்றின் விலையையும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு உங்களுக்கு பிடித்த வசதிகளை எந்த கைபேசியில் உள்ளது என்று தெரிந்து கொள்ள கூகிள் சதுக்கங்கள் தேடுதல் முடிவின் வலது புரத்தில் உள்ள (Add Column) என்ற களத்தில் உங்களுக்கு பிடித்த வசதியை களத்தில் இட்டு தேடினால் அனைத்து Nokia மாடல்களுக்கும் நீங்கள் கொடுத்த வசதியை ஒப்பிட்டு முடிவுகளை தரும்.
நீங்கள் விரும்பும் NOKIA மாடல் தேடுதல் முடிவுகளில் வரவில்லை என்றால் நீங்களாகவே உங்களுக்கு பிடித்த NOKIA மாடலின் பெயரை சாளரத்தின் கடைசியில் உள்ள (Add Item) என்ற களத்தில் இட்டு தேடலாம்.




