FLV லிருந்து டிவிடி. டிவிடியிலிருந்து FLV மாற்றுவதற்கு
ADVERTISEMENTயூடியூப் போன்ற வீடியோத்தளங்களில் இருந்து ஏராளமான வீடியோக்களை இணையிறக்கம் செய்திருப்போம்.அந்த வீடியோக் கோப்புகள் அனைத்துமே FLV எனப்படும் Flash Video வகையில் அமைந்திருக்கும். அவற்றைக் கணினியிலோ, அலைபேசிக் கருவிகளிலோதான் பார்த்து மகிழலாம். ஆனால் இந்த FLV கோப்புகளை DVD வடிவிற்கு மாற்றி பெரிய தொலைக்காட்சித்திரையில் பார்த்து மகிழ ஏதேனும் மென்பொருட்கள் உள்ளனவா என்று தேடியபோது கிடைத்த மென்பொருட்களை இந்தப் பதிவின் வாயிலாகத் தருகிறேன்.
அமாடிஸ் என்னும் ஒரு எளிய மென்பொருளைக்கொண்டு FLV கோப்புகளை DVDயில் ஓடக்கூடிய வடிவிற்கு மாற்றலாம்.
பின் அதை வீட்டில் இருக்கும் டிவிடி ப்ளேயர், காரில் உள்ள மற்றும் நடமாடும் வகையில் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அனைத்து டிவிடி ப்ளேயர்களிலும் இயக்கிப் படம் பார்த்து மகிழலாம்.

ப்ளாட்டோ என்னும் மென்பொருளைக் கொண்டு ஏராளமான வீடியோ வகைகளில் இருந்து FLV க்கு மாற்றலாம்.
rm, divx, xvid, avi, wmv, asf, mpg, mpeg, vob, mov, qt, mp4, 3gp, swf, nsv இத்தனை வகை கோப்புகளில் இருந்து FLV video ஆக மாற்றிட இயலும். 
இந்த இரண்டும் மென்பொருட்களுமே மிக எளிமையாகப் பயன்படுத்துவதற்கு உகந்ததாக உள்ளன. இணையிறக்கச் சுட்டிகள் கீழே.



