கணினியின் தேவையற்ற காலி ஃபோல்டர்களை அழிப்பதற்கு
ADVERTISEMENTநம் கணினியில் இயங்குதளத்துடன் (Operating System) வேறு ஏதேனும் மென்பொருட்களை (Software applications) நிறுவும்போது, சில ஃபோல்டர்கள் உருவாகும். பின் வேறு ஒரு காரணத்துக்காக அந்தப் பயன்பாட்டினை கணினியிலிருந்து அழிப்பதற்காக Uninstall செய்வோம். ஆனால் அது குறிப்பிட்ட சில ஃபோல்டர்களை (folders) அழிக்காமலேயே விட்டுவிடும்.
இது போல கணினியில் தேவையில்லாத காலி ஃபோல்டர்கள் (empty folders) நிறைய உருவாகி இருக்கும்.தவறுதலாக நாமே New Folder உருவாக்கி இருப்போம்.ஆனால் அழிக்க மறந்திருப்போம்.
இப்படி நம் கணினியின் வன் வட்டு என்றழைக்கப்படும் hard disk ல் ஏற்கனவே உருவாகி இருக்கக்கூடிய அனைத்து empty folders ஐயும் கண்டுபிடித்து அழிப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Fast Empty Folder Finder.
இதன் மூலம் தேவையற்ற காலி ஃபோல்டர்களை கண்டறிவதுடன் அவற்றை ஒரேயடியாக அழித்துவிடவும் செய்யலாம். இப்படிச் செய்த பிறகு கணினியின் hard diskன் செயல்பாட்டின் வேகம் அதிகரிக்கும். நல்ல இயங்குதிறன் நமக்குக் கிடைக்கும்.
தரவிறக்கச் சுட்டி : உங்களுக்கு இந்தப் பயன்பாட்டினைப் பிடித்திருந்தால் இங்கே சொடுக்கி தரவிறக்கம் செய்யலாம்.




March 25th, 2009 at 8:49 pm
SPAM FREE பரிந்துரை இல்லாத இயங்கு (எக்ஜிக்யூட்டிவ்) கோப்புகளை தரவிரக்கம் செய்ய பரிந்துரைக்காதீர்கள், கொடுத்த வேலையை செய்வதுடன் அதுபாட்டுக்கு எங்கிட்டாவது போய் உட்கார்ந்து SPAM MAIL அனுப்பிக் கொண்டு இருக்கும் நமக்கு தெரியாது. SPAM FREE உள்ள EXE FILE களை மட்டும் பரிந்துரையுங்கள். ஏனென்றால் இலவச மென்பொருள் பல ஸ்பேம் ஜெனரேட்டர்/சர்வராக இயங்குகின்றன, அப்படித்தான் அவர்கள் இலவச சேவை ஆற்றுவார்கள்
cnet போன்ற தளங்களில் இருக்கும் இலவச மென்பொருள்களில் ஸ்பேம் இல்லை என்று அவர்கள் சான்றிதழ் வைத்திருப்பார்கள், அவை எல்லாம் Spam ஆக இருக்காது