| Mobile | RSS

பவர்பாய்ண்ட் ஸ்லைடில் இருந்து படங்களைப் பிரித்தெடுக்க

March 13th, 2009 | No Comments | Posted in ஆலோசனைகள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


Powerpoint  வாயிலாக Slide show பார்த்திருப்போம்.அதில் ஒவ்வொரு Slide உடன் பொதிந்திருக்கக் கூடிய படங்களைத் தனியாகப் பிரித்தெடுக்க ஆசைப்பட்டால் என்ன செய்யவேண்டும்?

1. வழக்கம் போல Print Screen அழுத்தி, ஏதேனும் Photo Editing மென்பொருளின் உதவியுடன் ஒவ்வொரு படமாகப் பிரித்தெடுக்கலாம். ஆனால் இது நமது நேரத்தை விழுங்கும் ஒரு செயல்.

2. Screen Capture செய்வதற்காகவே SnagIt போன்ற மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதியை மட்டும் Capture செய்யலாம். பின்பு அவற்றை ஒவ்வொன்றாக கோப்புகளாக மாற்றிவிடலாம்.



மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட்

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட்

3. Power Point பயன்பாட்டில் இருந்தபடி File ==> Save As கொடுத்தபிறகு, அதில் .html, .htm கோப்பு வடிவில் சேமியுங்கள். எல்லாப் படங்களும் தனியே ஒரு குறிப்பிட்ட _files எனப்படும் Folderல் சேமிக்கப்பட்டுவிடும். அங்கே சென்று அனைத்துப் படங்களையும் கையகப்படுத்தலாம்.

4. Open Office பயன்பாட்டின் மூலமாகவும் மாற்றலாம்.
PPT கோப்பினை Open Office வழியாகத் திறக்கவும்
அதை ODP (Open Office Impress Format) வடிவில் சேமிக்கவும்.
ODP கோப்பினை .zip என பெயர் மாற்றவும். அதாவது Extension ஐ மற்றும் மாற்றவும்.
பின்பு .zip கோப்பினை விரிக்கவும்.
Pictures எனப்படும் ஒரு folder உருவாகி இருக்கும்.
அதில் அனைத்துப் படங்களும் உங்களுக்காக தயாராக இருக்கும்.

Leave a Reply 427 views, 1 so far today |
Tags: ,
  • No Related Post

Comments are closed.




© 2008 - 2010 Tamil Tech Information.