Tamil Tech Information » ஆலோசனைகள்
கூகிள் (தமிழ் – ஆங்கிலம்) (ஆங்கிலம்-தமிழ்) அகராதி
கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை எங்களை மிகவும் கவர்ந்து விட்டது. சில நாட்களுக்கு முன் வரை www.tamildict.com என்ற தளத்தின் மூலமாகவே (ஆங்கிலம் – தமிழ் ) (தமிழ் – ஆங்கிலம்) அகராதியை பயன்படுத்தி  வந்தோம்.
கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை மிகவும் பயனுள்ள  சேவை.
இச் சேவையை பயன்படுத்த www.google.com/dictionary என்ற முகவரிக்கு சென்று English — Tamil தேர்ந்தெடுத்து ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம்.
கூகிள் தமிழ் – ஆங்கில அகராதி
விண்டோஸ் சில குறிப்புகள்
விண்டோஸ் இயங்குதளத்தை எப்போது நிறுவியுள்ளீர்கள், இயங்குதளத்தின் தகவல்களை ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள systeminfo என்ற கட்டளையை command prompt சாளரத்தில் கொடுக்க வேண்டும்.
ஆனால் systeminfo என்ற கட்டளை கணினியின் அனைத்து தகவல்களையும் காண்பிக்கும். இந்த systeminfo கட்டளையை தனிப்பயனாக்கு (customize) முறையில் மிகவும் எளிதாக நமக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும்.
எடு. கா
1. உங்கள் விண்டோஸ் இயங்குதளம் எப்போது நிறுவியுள்ளீர்கள் என்ற தகவலைப் பெற.
systeminfo | find/i “install date”
2. உங்கள் கணினியின் நினைவகம் மற்றும் அதனை சார்ந்த விபரங்களை தெரிந்து கொள்ள
systeminfo | find/i “memory”
3. உங்கள் கணினியின் விபரங்களை தெரிந்து கொள்ள
systeminfo | find/i “os”
விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் மற்றும் உறையை எப்படி பூட்டுவது ?
உங்கள் கோப்புகள் அல்லது உறையை மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.
முதலில் உங்கள் கோப்பு அல்லது ஒரு உறையை தேர்ந்தெடுங்கள்.
பின்பு முனையத்தை தேர்ந்தெடுக்கவும் (start–>Accessories—->Command Prompt)
முனையத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறை அல்லது கோப்பின் பாதைக்கு செல்லவும். சென்ற பின் attrib +h +s +r Folder name or File Name என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.
எ.டு கா
attrib +h +s +r hide இந்த கட்டளை hide என்னும் உறையை பூட்டிவிடும் இதனால் யாரும் அவ்வளவு எளிதாக உங்கள் உறை அல்லது கோப்பை கண்டுபிடிக்க இயலாது. இந்த பூட்டை நீக்க attrib -h -s -r hide என்ற கட்டளை பூட்டினை நீக்கிவிடும்.
உபுந்து லினக்ஸில் தமிழ்
உபுந்து லினக்ஸ் உபயோகப்பிவர்கள் நம் தாய் மொழிகளிலேயே உபுந்துவை  இயக்கலாம், பல்வேறு முக்கிய இந்திய மொழிகள் உபுந்து லினக்ஸ் உள்ளடக்கியுள்ளன. உங்களிடம் இணைய இனைப்பு இருந்தால் போதும் மொழி எழுத்துருக்கள் மற்றும் மொழிக்கு தேவையான படிவங்களை இணையத்தில் இருந்து இறக்கி பதிந்து கொள்ளலாம்.
உபுந்து லினக்ஸை தமிழில் இயக்க
வழிமுறைகள்
Language support என்ற அமைப்பை System->Administration->Language Support என்ற தெரிவில் தேர்ந்தெடுத்தபின்.
Install/Remove
Languages என்ற பொத்தானை அழுத்தவும், கீழே உள்ள கான்பிக்கப்பட்டுள்ள படத்தை போல் ஒரு சாளரம் திறக்கும்.
இந்த சாளரத்தில் என்ன என்ன மொழிகள் பதிந்துள்ளன என்று காட்டும், இதில் தமிழ் (Tamil) மொழியை தெரிவு செய்து, அதன் அங்கங்களையும்(Components) தெரிவு செய்து Apply Changes என்ற பொத்தானை அழுத்தவும்.
பின் Languages சாளரத்தில், மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தை போல் ஒரு விதமான சிறப்பு எழுத்துருக்கள் தோன்றும் அவற்றை தெரிவு செய்து மூடினால் உங்கள் உபுந்து இயங்கு தளம் தமிழில் இயக்க தயாராகிவிட்டது.
குறிப்பு: உங்கள் உபுந்து இயங்கு தளம் தமிழில் இயக்க restart செய்ய வேண்டும்.
உபுந்து லினக்ஸில் தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்வது எப்படி ?
உபுந்து லினக்ஸில் பலர் எப்படி தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்வது பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, விண்டோஸ் இயங்கு தளத்தில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்ய இலவச மென்பொருள்க்ளான NHM Writer, ekalappai anjal மற்றும் Tavultesoft’s Tamil Keyboard Layouts For Unicode தனக்கென ஒரு சிறந்த இடத்தை பெற்றுள்ளது.
லினக்ஸ் இயங்கு தளத்திற்க்கு என தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்ய மென்பொருள் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் உபுந்து லினக்ஸில் எளிதாக ஷப்தலிபி (Phonetic) தமிழில் தட்டச்சு செய்யலாம்.
மேலே காண்பிக்கப்பட்டுள்ள பட்த்தில் ஒரு தட்டச்சு icon தெரியும், அதை right click செய்து SCIM setup என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
SCIM அமைப்பை System–>Preferencesல் தேர்ந்தெடுத்தபின்
Hotkyesல் உள்ள Trigger என்ற தெரிவுக்கு உங்களுக்கு பிடித்த விசையை (Keys) தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த தெரிவின் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலிலும் ஒரே நேரத்தில் விசயை மாற்றிக்கொள்ளலாம்.
நீங்கள் நேரடியாக தமிழ் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சுக்கு Hotkeysஐ global setupல் செய்து கொள்ள்லாம்.
SCIM அமைப்பில் Panel என்ற optionalல் GTK என்பதை தேர்ந்தெடுத்து SCIM tool barஇன் அமைப்புகளை தேர்வு செய்துகொள்ளலாம்.
SCIM tool bar
SCIM tool bar ல் உள்ள மொழிகள்
குறிப்பு : SCIM tool bar தோன்றவில்லை என்றால் எதாவது ஒரு ஆவன கோப்பை திறந்து பார்க்கும் பொழுது SCIM tool bar மேல்மேசையின் எதாவது ஒரு இடத்தில் தோன்றும்.
ஓபெரா யூனைட் : சுய வழங்கியல் இணைய உலாவி
ஒபெரா யூனைட் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஒபெரா அறிமுகப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் இணைய தேவையும் அதனால் அதிகரித்து வரும் வழங்கியல் (Server) தேவைகளை குறைக்க இந்த புதிய தொழிநுட்ப்பத்தை ஒபெரா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் நமக்கு என்ன பயன் நமக்கும் வழங்கியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று என்னினால் அது தவறு. நீங்கள் இணையத்தில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் இரண்டாம் நபர் (MiddleWare) தேவைப்படும்.
எ.டு கா : இணையத்தை பயன்படுத்த நீங்கள் இணைய சேவை வழங்குபவரிடம் (ISP) அனுகுவீர்கள் அவர் உலகில் உள்ள இணையத்தில் இனைக்க உதவுவார் ஆகையால் இணையத்தை பொருத்தளவில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் இரண்டாம் நபர் தேவைப்படுகிறார் அதையே இங்கு சற்று தொழில்நுட்ப ரீதியாக வழங்கியல் (Server) என்று குறிப்பிடுகிறோம்.
ஒபெரா யூனைட் மூலம் உங்கள் கணினியை ஒரு வழங்கியலாக செயல்பட வைக்கலாம். இதனால் நீங்கள் இரண்டாம் நபர் தளத்திற்க்கு சென்று உங்கள் படங்கள், பாட்டுக்களை ஏற்றி மற்றவரிடம் பகிர தேவையில்லை. நேரடியாகவே உங்கள் கணினியிலிருந்து பகி்ர்ந்து கொள்ளலாம்.
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="500" height="340" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/D5hr-6cw4M8&hl=en&fs=1&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="500" height="340" src="http://www.youtube.com/v/D5hr-6cw4M8&hl=en&fs=1&rel=0" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>
ஒபெரா யூனைட் புதிய தொழில்நுட்ப்பம் வருகிற ஒபெரா 10 பதிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒபெரா யூனைட் தரவிறக்கம் செய்து நிறுவும் போது நீங்கள் புதிய அல்லது இருக்கும் ஒபெரா கணக்கை உபயோகித்து நிறுவ வேண்டும்.
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="500" height="340" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/-omonwFkkrY&hl=en&fs=1&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="500" height="340" src="http://www.youtube.com/v/-omonwFkkrY&hl=en&fs=1&rel=0" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>
மேல உள்ள நிகழ்படம் ஒபெரா யூனைட் நிறுவ உதவியாக இருக்கும், நிறுவும் போது ஒபெரா யூனைட் உங்களுக்கென தனி (Sub-domain) உங்கள் பெயரில் ஒன்றை உருவாக்கி கொடுக்கும். (computername.username.operaunite.com) இதில் நீங்கள் Computername என்பதை உங்கள் வீட்டுக்கணினிக்கென ஒரு பெயரை உருவாக்கலாம் (home.tothetech.operaunite.com) அல்லது நீங்கள் அலுவகத்தில் இருக்கும் போது அலுவலக கணினியில் ஒபெரா யூனைட் நிறுவி அதற்கென தனியாக computername உருவாக்கிக் கொள்ளலாம் (office.tothetech.operaunite.com) ஒவ்வொரு முறையும் ஒபெரா யூனைட்  இணையத்தில் இனைக்கும் போது DNS என்று சொல்லப்படும் Domain Name System IP முகவரியை தானகவே உங்கள் கணக்கிற்க்கு(home.tothetech.operaunite.com) எடுத்துக் கொள்ளும் அதனால் Dynamic IP பற்றி கவலைப்படத் தேவையில்லை.
ஒபெரா யூனைட் சேவைகள்
ஓபெரா யூனைட் தற்போழுது ஆறு சேவைகளை வழங்குகிறது (கோப்பு பறிமாற்றம், பிரிட்ஜ், ஒளிபட பறிமாற்றம், ஊடக இயக்கி, இணைய வழங்கி, தி லாங்க்) மேலும் பல புதிய சேவைள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒபெரா குறிப்பிட்டுள்ளது.
இந்த சேவைகளின் மூலமாக உங்கள் கணினியை ஒரு சிறிய வழங்கியலாக மாற்றலாம். அது மட்டும் இல்லாமல் இந்த சேவைகளை இயக்கிய பின் உங்களுக்கான தனி URLல் மூலமாக மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். எடு.கா (http://home.tothetech.operaunite.com/file_sharing/content/)
அப்படி பகிரும் போது எல்லாரும் உங்கள் கோப்புகளை பெற முடியும் ஆனால் சில முக்கியமான உறையை (Folder)களை நீங்கள் மற்றவர்களிடமிருந்து  கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கலாம்.
பின்குறிப்பு : ஓபெரா யூனைட் சேவைகளை அனுபவிக்க சேவைகளை configure செய்ய வேண்டும் எ.டுகா :  ஒளிபட பறிமாற்ற சேவையை துவக்கும் முன் நீங்கள் எந்த உறையில் (Folder)ல் உங்கள் ஒளிபடங்களை வைத்துள்ளீர்கள் என்று தெரிவிக்க வேண்டும்.
ஊடக இயக்கி :இந்த ஊடக இயக்கி (Media Player) மூலமாக உங்கள் mp3 கோப்புகளை உங்கள் நண்பர்களிடம் பகரிந்தும், உங்கள் கணினியில் இருந்து தரவிறக்கம் செய்யாமலயே உங்கள் நண்பர் படலும் கேட்கலாம். எடு.கா (http://home.tothetech.operaunite.com/meida_player/content/)
ஓபெரா யூனைட் பேஜ் ஒபெரா யயூனைட் பேஜில் உங்களைப் பற்றின விபரங்கள் மற்றும் உங்கள் கோப்புகள், ஊடக இயக்கி அகியவற்றின் குறிப்புகள் அடங்கிய பக்கம்.
ஒளிபட பறிமாற்றம்:  ஒளிபட பறிமாற்ற வசதியின் மூலமாக உங்கள் படங்களை இரண்டாம் நபர் (எ.டுகா picasa, flickr) இல்லாமல் நேரடியாக உங்கள் நண்பர்களிடம் சேர்த்து விடலாம்.
தி லாங்க் : தி லாங்க் என்ற சேவை உங்கள் கணினியிலேய ஒரு சிறிய அரட்டை அரங்கத்தை ஏற்படுத்தி நண்பர்களிடம் அரட்டை அடிக்கலாம்.எடு.கா (http://home.tothetech.operaunite.com/the_longue/lounge.html)
இணைய வழங்கி : உஙகள் கணினியில் ஒரு HTML நிரலை எழுதி அதை மற்றவர்களிடம் காண்பிக்க இரண்டாம் நபர் தளங்களை நாட வேண்டியிருந்தது, இந்த ஓபெரா யூனைட் மூலமாக உங்கள் இணைய உலாவியிலேயே ஒரு வழங்கியலை அமைத்து அதை configure செய்து உங்கள் நண்பர் அல்லது வாடிக்கையாளரிடம் உங்கள் HTML  பக்கத்தை காண்பிக்கலாம்.எடு.கா (http://home.tothetech.operaunite.com/webserver/content/)
பிரிட்ஜ்: அடிக்கடி இணையத்தில் குறிப்பு எடுப்பவர்களுக்கு பிரிட்ஜ் வசதி உபயோகமானது இதையும் நீங்கள் பகிர்ந்து நண்பர்களிடம் கொள்ளலாம் (எடு.கா : http://home.tothetech.operaunite.com/fridge/)
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவி
கூகிள் தனது புதிய மொழிபெயர்ப்பு இயந்திர கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் (Google Translator toolkit) இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை இதில் சேர்த்துள்ளனர். கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் தமிழ் மொழியியை சேர்க்கவில்லை.
இது போல பல மொழிகளை கூகிள் தனது மொழிபெயர்த்தல் சேவையில் சேர்க்கவில்லை. இப்பொழுது கூகிள் மொழிபெயர்ப்பு வேலையை கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் (Google Translator toolkit) மூலமாக பயனாளர்களிடமே அளித்துவிட்டது, இதற்க்கு முக்கிய காரணம் ஒரு ஆங்கில சொல்லுக்கு நிறைய தமிழ் வார்த்தைகள் உள்ளன, இதனால் ஒரு ஆங்கில வார்த்தைக்கு எது சிறந்த எளிதான தமிழ் சொல் என்பதை(Translation Search Resultல்) நாமே வாக்களிக்கலாம்.
இந்த கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் மூலமாக உங்கள் ஆங்கில பதிவேடுகளை (MS WORD .doc, Open Document Text  .odt, HTML .html, Plain text .txt, Rich text .rtf) மேலற்றம் செய்து கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் மூலமாக மொழி்பெயர்த்துக் கொள்ளலாம்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் உங்களுக்கு பிடித்த இணையதளம் அல்லது விக்கீபீடியாவில் உள்ள கட்டுரைகள் அல்லது knol என்று சொல்லப்படும் அறிவுத் தளத்தை மொழிபெயர்க்கலாம்.
குறிப்பு : கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவி கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் உள்ள மொழிகளுக்கு மட்டுமே முழுமையாக மொழிபெயர்த்துக் கொடுக்கும்.
நீங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தால் குறிப்பிட்ட சொற்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்படும்.
உங்கள் ஆவணங்கள் அல்லது கோப்புகளை மேலற்றம் செய்வதற்க்கு முன்னால் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் உள்ள sharing மற்றும் glossaries பற்றி பார்ப்போம்.
Sharing : மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தில் sharing என்ற தேர்வை பார்க்கலாம் இதில் global shared TM என்ற தெரிவை தேர்ந்தெடுத்தால் நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் மூலமாக நீங்கள் உபயோகப்படுத்தும் தமிழ் வார்த்தைகளை பொதுவான இடத்தில் வைத்துவிடுவர். நீங்கள் உபயோகப்படுத்தும் தமிழ் வார்த்தைகளை தனிமையாக வைத்துக்கொள்ள நீங்கள் புதிய Translation Memoryயை உருவாக்க வேண்டும்.
குறிப்பு : Global shared TM என்ற தெரிவை தேர்வு செயவ்தே நல்லது இதனால் பலர் தங்களுக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை மொழிபெயர்க்கும் போது பகிர்ந்து கொள்ளலாம்.
Glossary: இதன் மெய்பொருள் சேகரிக்கப்பட்ட வரைமுறை என்று அர்த்தம். நீங்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு இனையான தமிழ் வார்த்தைகள் கொண்ட CSV கோப்பு உங்களிடம் இருந்தால் இதை மேலற்றம் செய்து நீங்கள் மொழிபெயர்க்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். CSV கோப்பை (Custom Glossaries) எப்படி உருவாக்கி பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் பணியிடம் – (Google Translator toolkit Workbench)
குறிப்பு :மேலே உள்ள படத்தை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்கவும்.
எங்களது ஆங்கில வலைத்தளத்தை (www.tothetech.com) நாங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் மேலேற்றி ஆங்கிலத்தில் இருந்த்து தமிழில் மொழிபெயர்க்கும் போது நாங்கள் சில அற்புதமான அம்சங்களை கண்டோம் அதை இங்கு விவரிக்கவுள்ளோம்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் பணியிடத்தில் இரண்டு சாளரங்கள் உள்ளன இவற்றில் முதல் சாளரம்(இடது)  அசல் ஆங்கில எழுத்துக்களை கொண்டது(Original English Text) இரண்டாவது சாளரத்தில்(வலது)ஆங்கிலத்தில் இருந்த்து தமிழுக்கு(English to Tamil) மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துக்கள் இருந்த்தன. இரண்டாவது சாளரத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு எழுத்து பெட்டி உள்ளது இதில் முதல் சாளரத்தில் உள்ள ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தைகள் இருந்தால் காண்பிக்கும். அது மட்டும் இல்லாமல் ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிறைய தமிழ் சொற்கள் இருந்த்தால் அவற்றையும் காண்பிக்கும்.
குறிப்பு : இந்த அம்சத்தை அனுபவிக்க showtoolkit என்ற பொத்தானை செயல்பட வைக்க வேண்டும்.
(எடு.கா) எங்களது ஆங்கில வலைதளத்தில் Internet என்ற சொல்லுக்கு நிறைய தமிழ் வார்த்தைகளை மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள Translation Search Resultல் காணலாம். அத்துடன் சிறந்த தமிழ் எழுத்துக்களை வாக்களிக்கலாம்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் பணியிடத்தில் இரண்டாவது சாளரத்தில் உள்ள வெள்ளை நிற எழுத்து பெட்டியில் Previous மற்றும் Next சொடுக்குகள் இருக்கும் இதை சொடுக்கினால் அடுத்த சொல் அல்லது அதற்க்கு முன் உள்ள சொல்லுக்கு உங்களை அழைத்து செல்லும்.
குறிப்பு :மேலே உள்ள படத்தை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்கவும்.
ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்கள் உங்களுக்கு மொழிபெயர்க்கப்படாமல் இருந்தால் அதை நீங்களே மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
மேலே உள்ள படத்தில் Edit என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு Find and Replace என்ற தெரிவு கிடைக்கும்
இதில் Find என்ற களத்தில் உங்களின் ஆங்கில எழுத்துக்களை இட்டு பிறகு Replace என்ற களத்தில் அதற்க்கு இனையான தமிழ் வார்த்தையை இட்டு Translated Text மற்றும் Match case ஆகிய தெரிவை தேர்தெடுத்த பின்னர் Replace அல்லது Replace All பொத்தானை அழுத்தினால் அந்த இரண்டாவது சாளரத்தில் உள்ள குறிப்பிட்ட ஆங்கில வார்தைகளை தமிழ் வார்தகைகளாக மாற்றிவிடலாம்.
இப்படி செயவதன் மூலம் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் நீங்கள் புகுத்திய ஆங்கில வார்த்தைகளுக்கு இனையான தமிழ் வார்த்தைகள் அனைத்து பயனாளர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
இதனால் விரைவில் கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் நம் தாய் மொழியை கொண்டு வந்து விடலாம்
குறிப்பு : தொழில்நுட்ப பதிவுகளை எழுதுவோர் இந்த கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் ஆங்கில வார்த்தைகளுக்கு இனையான தமிழ் சொற்களை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கூகிள் சதுக்கங்கள்
கூகிள் சதுக்கங்கள்(Google Squared) கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தேடுதல் உத்தி (Search Technique) என்ன தான் மைக்ரோசப்ட் முயற்ச்சி செய்து புதுசு புதுசா பெயரை மாற்றி தேடு பொறிகளை (தீர்வு பொறி) அறிமுகப்படுத்தினாலும் கூகிளின் அபார தேடுதல் உத்தியின் செயல் திறனை பிடிக்க முடியவில்லை. பிங்க் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலே கூகிள் சதுக்கங்கள் பரிசோதனைக்கு வந்து விட்டது.
இவ் வலைப்பூவில் கூகிள் சதுக்கங்கள் பற்றி எழுதுவதற்க்கு முன்பே பலர் இதை பற்றி எழுதி விட்டனர் அதனால் அதிகம் இதை பற்றி விவரிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் .
அதனால் கூகிள் சதுக்கத்தை எவ்வாறு பயனுள்ளதாக உபயோகபடுத்தலாம் என்று பார்ப்போம். நீங்கள் ஒரு விலை உயர்ந்த NOKIA கைபேசியை வாங்க நினைக்குறீர்கள் ஆனால் உங்களுக்கு NOKIA கைபேசியின் மாடல்கள் மற்றும் அவற்றின் அம்சங்களை பற்றி தெரியவில்லை. இவை அனைத்தையும் கூகிள் சதுக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலே காண்பிக்கப்பட்ட படத்தை போல கூகிள் சதுக்கங்கள் நீங்கள் தேடிய சொற்களுக்கு தேடுதல் முடிவுகளை  பெட்டியில் அழகாக காண்பிக்கும். அது மட்டும் இல்லாமல் அவற்றின் அம்சங்களை அழகாக எடுத்து காண்பிக்கும்.
பலர் கைபேசி வாங்கும் போது சில முக்கிய அம்சங்களை எதிர்பார்ப்பர் (எ.டு.கா) Bluetooth இந்த வசதி நீங்கள் வாங்க போகும் கைபேசியில் இருக்குமா என்று கூட தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் அவற்றின் விலையையும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு உங்களுக்கு பிடித்த வசதிகளை எந்த கைபேசியில் உள்ளது என்று தெரிந்து கொள்ள கூகிள் சதுக்கங்கள் தேடுதல் முடிவின் வலது புரத்தில் உள்ள (Add Column) என்ற களத்தில் உங்களுக்கு பிடித்த வசதியை களத்தில் இட்டு தேடினால் அனைத்து Nokia மாடல்களுக்கும் நீங்கள் கொடுத்த வசதியை ஒப்பிட்டு முடிவுகளை தரும்.
நீங்கள் விரும்பும் NOKIA மாடல் தேடுதல் முடிவுகளில் வரவில்லை என்றால் நீங்களாகவே உங்களுக்கு பிடித்த NOKIA மாடலின் பெயரை சாளரத்தின் கடைசியில் உள்ள (Add Item) என்ற களத்தில் இட்டு தேடலாம்.
ஆட்சென்ஸ் குறித்த 5 கேள்விகளும், பதில்களும்
குறுக்கு பதிவு : http://www.tamilnenjam.org/2009/06/blog-post_04.html
இந்த  கேள்விகளைக் கேட்டவர் : திரு. சந்திரமோகன்
1. எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளம் இருக்கிறது என வைத்து கொள்வோம், அப்படி இருக்கும் பச்சத்தில், ஒரு google adsense கணக்கு வைத்து கொண்டு எல்லா வலைத்தளத்திலும் விளம்பரம் செய்யலாமா ?
Yes. You can do. ஆமாம். தாராளமாக
2. ஒரே வலைத்தளத்தில் Google, Bidvertiser, Guruji இப்படி எல்லா விளம்பரங்களையும் போடா முடியுமா ? அல்லது ஏதாவது கட்டுப்பாடு உண்டா ?
போடலாம். தாராளமாக. ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காண்பித்துப் போடவேண்டும். Bidvertiser, Adbrite, Guruji, Komli எதையும் இணைத்துப் போடலாம். ஆனால் வரும் விசிட்டர்கள் – வெறுப்பாகிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. நான் இப்போது இந்தியா’வில் வசித்து வருகிறேன், Google Check ‘ஐ (காசோலை) அனுப்பும் போது TAX அல்லது Service Charge இப்படி எதாவது பிடித்து கொண்டு அனுப்புகிறதா ? டாலரில் தான் செக் அனுப்புமா ? or ரூபாயில் அனுப்புமா ? (ரொம்ப சில்லியா இருக்குனு கூச்சபடாதீங்கன்னே, எல்லாம் ஒரு தகவல் திரட்டுவதர்காகத்தான் )
tax, service charge பிடிப்பதில்லை. ஆனால் income tax அளவுக்கு உங்கள் adsense வருமானம் இருப்பின், நீங்களே மனமுவந்து அதை அரசிடம் காண்பித்து வருமானவரி கட்டவேண்டியது உங்களது கடமை. இதை google கூறுகிறது. டாலரில் வேண்டுமா / ரூபாயில் வேண்டுமா – என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். நான் எனக்கு இந்திய ரூபாய்களில் காசோலை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்கிறேன்.
4. இப்போது நான் google ‘டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Google personal profile’லில் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ? இப்போது நான் google டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Gஓக்லெ பெர்சொனல் profile ல் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ?
சீனாவைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் அக்கவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம். சீனாவுக்கு மாற்ற வேண்டும் என்றால், புதிய அக்கவுண்ட் உருவாக்குவதைத்தவிர வேறு வழியில்லை . யூரோ, டாலர் பிரச்சினை இருப்பின் அதை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும். ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு மாற்ற முயற்சிக்கும்போது பிரச்சினை எழுந்ததாக நண்பர் கூறினார்.
5. Web Hosting  பண்ணுவதற்கு சிறந்த தளம் ?
இந்தக் கேள்விக்கு பின்னூட்டம் வாயிலாகப் பதில் தந்தவர் :The Rebel
Best Web hosting Site – Hostgator.com
Plans- Start at $5 per month
Best Sites to Register Domain Names:
name.com(cheap n best)
dynadot.com
godaddy.com
Hope its useful for newbies.Its based on my personal experience.
கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டவர் திரு. பிரபாகரன்
plz tell about guruji ads?
கூகிள் ஆட்சென்ஸ் வாயிலாக க்ளிக்குகளைப் பெறுவது மிகக் கடினம். ஒரு நாளில் 1000 பார்வையாளர்கள் வந்து தலைக்கு 3 பக்கங்களை வாசித்து, 3000 இம்ப்ரெசனைப் பெற்றிருந்தாலும், ஒட்டு மொத்த க்ளிக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் 30 க்ளிக்குகள் விழுந்திருக்கும்.இந்த 30 க்ளிக்குகளுக்கு 2$ ஏறி இருக்கும். குத்துமதிப்பாக 95 முதல் 100 ரூபாய்.
Google adsense சில ட்ரிக்குகள் செய்து ஒரே க்ளிக்கில் 10$ பார்த்தவர்களும் இருக்கிறார்கள். எனக்கு ஒரே க்ளிக்கில் அதிகபட்சமாக 7$ ஒரு முறை வந்தது. ஆனால் அது நல்ல விளம்பரமாகவும், வேறு நாட்டில் விழுந்த க்ளிக்காகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாட்டில் இருந்து வரும் க்ளிக்குகளைக் கொண்டே நமது வருமானம் கணக்கில் கொள்ளப் படுகிறது. ஒரே விளம்பரத்தை அமெரிக்காவில் இருந்து க்ளிக்கினால் கிடைக்கும் பண மதிப்பு, இந்திய க்ளிக்கால் கிடைக்காது. இது நான் கண்டறிந்த உண்மை.
கூகிள் ஆட்சென்ஸ் – புதிய பதிவர்களுக்காக
குறுக்கு பதிவு : http://www.tamilnenjam.org/2009/06/blog-post_03.html
முன் குறிப்பு :
அருமை நண்பர் செந்தழல் ரவியின் பதிவின் எதிரொலியாக. கூடுமானவரை எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி இருப்பதாக நினைக்கிறேன். புரியாதவர்கள் 3 முறையாவது படிக்கவும். வறட்டுத் தியரி என ஓடிவிடாதீர்கள். பதிவு முழுக்க முழுக்க பக்கா ப்ராக்டிகல்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் adsense கணக்கு வைத்திருப்பவர்கள் குறைவாக இருந்தனர். ஆதலால் கேட்டவர்களுக்கெல்லாம், ஏன் தமிழ் வலைப்பதிவு வைத்திருந்தவர்களுக்கும் கூட google ஆதரவளித்து adsense பயன்படுத்த உரிமை வழங்கியது. நான் எனது பழைய தமிழ் ப்ளாக் வழியாக ஒரு முறை முயற்சித்தேன் – அதற்கெல்லாம் கூட அனுமதி வழங்கப்பட்டதை நினைவு கூர்கிறேன். (நானே 2 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் வலைப்பூ வாயிலாக ஆட்சென்ஸ் அனுமதி பெற்றேன். அப்போது அவர்கள் இவ்வளவு கெடுபிடிகளைக் கடைபிடிக்கவில்லை.)
ஆனால் தற்போது நிலைமை தலை கீழ். ஆங்கில வலைப்பூ ஆரம்பித்து 6 மாச காலம்
கடந்திருப்பவர்களுக்கும், பல்வேறு சோதனைகளைக் கடந்தே ஆட்சென்ஸின் அனுமதி
கிடைக்கிறது (இது இந்தியர்களுக்கு மட்டுமே).
ஏன் இப்படி?
இந்தியாவில் இருந்து ஆன்லைன் வழி வருமானம் ஈட்டுவதற்கு ஆசைப்படுபவர்கள் அதிகம். (ஏன் என்றால் மக்கள் தொகை பெருக்கம். இத்தனை சனம் இருக்கோம். அத்தனை சனத்துக்கும், உரிமம் வழங்கிவிட்டால் கூகிளுக்கும் பல்வேறு பிரச்சினைகள். ஆதலால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துத்தான் அனுமதி வழங்குகிறது. அதில் முதல் தகுதி – வலைப்பூ ஆரம்பித்து குறைந்தது 6 மாசகாலம் ஆகி இருத்தல் வேண்டும்.) ஆனால் இது அவர்களது விதிமுறைப் படிவத்தில் இடம் பெற்றிருக்கிறதா? என்பதை சோதித்து அறியுங்கள்.
சரி. பழைய பதிவர்கள் – ஏற்கனவே adsense அக்கவுண்டை எப்படியே பெற்றிருப்பவர்கள் – ஆனால் இது வரை பைசாவைக் கண்ணில் காணாதாவர்கள் – அவர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான் – தமிழில் எழுதி ஏன் ஏதாவது ஒரு இந்திய பிராந்திய மொழியில் எழுதி – அதன் மூலம் கூகிள் வழியாக பணம் பார்க்க முடியாது.
பணம் பார்க்க ஆசைப்பட்டால் – ஆங்கில வலைப்பூ / தளம் ஆரம்பித்து அதில் உங்கள் ஆட்சென்ஸ் கோடிங்கை இணைத்து நல்ல traffic உண்டாக்கி அதன் மூலம் தொடர்ந்து முயற்சிக்கவும்.
இட்லி சாப்பிட வேண்டும் என்றாலே முதல்நாளே மாவரைத்து அடுத்த நாள் தான் தயாரிக்கிறோம். அதற்கே குறிப்பிட்ட நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆட்சென்ஸும் அது மாதிரித்தான் – பொறுமை வேண்டும்.
புதிய வலைப்பதிவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கு adsense account உடனே வேண்டுமா?
இப்போதே ஒரு ஆங்கிலப்பதிவைத் துவங்கி, மாதத்திற்கு 5 பதிவுகளாவது எழுதி வாருங்கள். சின்னச் சின்னப் பதிவாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதில் உங்கள் கருத்துக்களை அள்ளித் தெளித்து வாருங்கள். ஆறு மாசம் கழித்து முயற்சித்தால் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 6 மாச காலத்திற்குள் இந்த வலைப்பூவின் page rank – அதை கண்டிப்பாக பூஜ்யத்தில் இருந்து 2,3 என அதிகரித்து வைக்க முயற்சிக்கவும்.
சரி. ஒரு வழியாக கூகிள் ஆட்சென்ஸ் அனுமதி பெற்றுவிட்டோம். இனி என்ன செய்வது?
முதல் 10$ சேர்க்க வேண்டும். உங்கள் வலைப்பூவின் பதிவுகளை நமது மக்கள் பார்த்து பிடித்திருந்தால், படிப்பவர்களின் கருத்தைக் கவனத்தைக் கவர்ந்திருந்தால், அதில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சி அவர்களை ஈர்த்திருந்தால் – அதில் என்னதான் இருக்கிறது என ஒரு க்ளிக்குவார்கள். இப்படி விளம்பரங்களை க்ளிக்கி அதன் மூலம் அவர்கள் அந்த டார்கெட் web siteல் சிறிது நேரம் உலவுவார்கள். எவ்வளவு நேரம் உலவுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் உங்களது கணக்கில் பணம் சேரத்துவங்கும். முதல் 10$ சேர்ந்ததும், உங்களது முகவரிக்கு google அனுப்பிய PIN number வந்து சேரும். இது ATM PIN எண்ணைப் போன்றது. இதை நீங்கள் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கைத் திறந்து அதில் தட்டெழுத வேண்டும்.
இந்த எண்ணை நீங்கள் சரியாக அளித்த பிறகுதான் உங்களுக்கு கூகிள் அளிக்கும் காசோலை @ check வீடு வந்து சேரும். இந்த எண்ணை 3 முறைகளுக்கு மேலாக தவறாக தட்டக் கூடாது.
நீங்கள் 10$ சேர்த்ததும் உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என எண்ண வேண்டாம். அவர்கள் அங்கே அனுப்பி உங்கள் கைக்கு வந்து சேர்வதற்கு 20 முதல் 30 நாட்கள் வரை ஆகும். பொறுமை அவசியம்.
ஒரு முக்கியமான விசயம் : எந்தக் காரணம் கொண்டும் உங்கள் வலைப்பூவின்,
உங்கள் கணக்கின் விளம்பரங்களை – உங்கள் கணினி, உங்கள் IP address
வாயிலாக ஒரு போதும் க்ளிக் செய்துவிடாதீர்கள். இது ஒரு முக்கியமான கோட்பாடு. தவறிக்கூட நமது விளம்பரத்தை நாமே ஒரு ஆர்வத்தில் கூட க்ளிக் செய்துவிடக் கூடாது.
தமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் போட்டோ, இந்திய மொழிகளில் ஆட்சென்ஸ் போட்டோ
சிறிது சம்பாதிக்கலாம் என்பது உண்மை. ஆனால் முழுக்க முழுக்க இந்திய
மொழிகளிலோ, தமிழிலோ இருக்கும் ஒரு வலைத்தளத்தை கூகிள் சப்போர்ட் செய்யாது
என்பதே உண்மை.
தினமலர் போன்ற தளங்களில் கூகிள் ஆட்சென்ஸ் வருகிறதே? எனக் கேட்பீர்கள்.
அவர்களது தளத்தின் page rank அதிகம். ஒரு நாளைக்கு பல லட்சக்கணக்கானோர்களால் பார்வையிடப்படுகிறது. அத்தனை லட்சம் ஹிட்கள் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களை premium உறுப்பினர்களாக்கி இருப்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட வரையறையைக் கடந்து எக்கச்சக்க visitors நமது தளத்தைப் பார்வையிட்டால், நாமும் premium user @ பயனராக ஆகலாம்.
நமது வலைப்பூ / தளத்தில் எத்தனை விளம்பரங்களை காட்சிக்கு வைக்கலாம்?
ஒரு பக்கத்தில் அதிகபட்சமாக 3 விளம்பரங்களுக்கு மட்டுமே அனுமதி. அது பட வடிவில், எழுத்து வடிவில் , படமாகவோ (அ) எழுத்தாகவோ இருக்கலாம். அதிகபட்சம் 3 விளம்பரங்களை ஒரு பக்கத்தில் காண்பிக்கலாம். ப்ரீமியம் உரிமம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
எக்காரணம் கொண்டும் தகவல்களே இல்லாத வெற்றுப்பக்கத்தில் @ empty pageல் கூகிள் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால் – அது பொதுச்சேவை @ பப்ளிக் சர்வீஸ் விளம்பர்ங்களையே காட்டும்.
இது போக இரண்டு சர்ச் பாக்ஸ் வைத்துக்கொள்ளலாம். 10$ சேர்த்துட்டோம். அதன் பிறகும் சேர்த்துச் சேர்த்து, இப்போது 160$ வரை சேர்த்துட்டோம். ஆனால் இன்னும் பின் எண் வரவில்லையா? மறுபடி பின் எண்ணை அனுப்புங்கள் என request செய்யலாம்.
அவர்கள் மீண்டும் பின் எண்ணை அனுப்புவார்கள். அந்த பின் எண்னை ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு காசோலை கிடைக்கும் என்பதை நினைவில் நிறுத்தவும்.
உங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். முகவரி மாற்றம் இருப்பின் மாதத்தின் 15ம் தேதிக்கு முன்னரே தெரிவித்து விடவேண்டும்.
நமக்கு நாமே என்று நமது ஐபி வழியாக, நம் கணினி வழியாக நமது விளம்பரங்களைக் க்ளிக்க கூடாது. ஒரு குழுவாகச் சேர்ந்து நீ எனக்கு / நான் உனக்கு என மாற்றி மாற்றி க்ளிக்
செய்யக் கூடாது. இதற்கு க்ளிக் ரிங் என்பார்கள். கூகிளின் database ல் எந்த IP address @ ஐபி முகவரியின் வழியாக க்ளிக் செய்யப்பட்டது என்கிற புள்ளிவிவரம் @ statistics பதிவாகிவிடும்.
ஒவ்வொரு க்ளிக்கின் ஐபி முகவரியும் அந்த டேட்டாபேசில் பதிந்திருப்பார்கள். நீ எனக்கு / நான் உனக்கு என மாற்றி மாற்றி க்ளிக் ரிங் செட்டப் செய்திருந்தால் – இரண்டு ஐபிகளும் ஒன்றை ஒன்று காட்டிக்கொடுத்து – இருவரது கணக்குகளும் முடக்கப்படும்.
எந்தெந்த மொழிகளை ஆட்சென்ஸ் ஆதரிக்கிறது என்பதைhttps://www.google.com/adsense/support/bin/answer.py?hl=en&answer=9727அறியலாம்.
ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இது நாள் வரை – எந்த இந்திய பிராந்திய மொழியையும் ஆட்சென்ஸ் ஆதரிக்கவில்லை. அப்படி நீங்கள் தமிழ் தளத்தில் ஆட்சென்ஸ் விளம்பரத்தைக் கண்டிருந்தால் – அது ப்ரீமியம் பயனர்களுக்கானது என்பதை அறிந்திடுங்கள்.
பின் எண் சோதனை வெற்றியடைந்துவிட்டது. அதன் பிறகு சிறிது சிறிதாக 100$ சேர்க்க வேண்டும். 100$ ஐ விட அதிகமாக உங்கள் கணக்கில் பணம் சேர்ந்திருந்தால், உங்களுக்கு
காசோலை அனுப்புவார்கள். சரி.
அதற்கு என்ன விதிமுறை?
இன்று தேதி ஜூன் 4. இந்த மாதம் 30ம் தேதிக்குள்ளாக நீங்கள் 100$ ஐ சேர்த்துவிட்டீர்கள்.
மாசத்தின் கடைசித் தேதிக்கு உள்ளாக 100$ ஐ தாண்டி உள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அவர்கள் எப்போது செக் அனுப்புவார்கள்.
கூகிள் ஆட்சென்ஸில் உங்கள் அக்கவுண்ட்டை சில பரிசோதனைகள் (auditing) செய்வார்கள்.
இந்தப் பரிசோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே வீட்டுக்கு பணம் அனுப்புவார்கள்.
ஜூன் 30க்குள் 100$ ஐத் தொட்டவர்களுக்கு, ஜூலை மாசத்தின் கடைசி வாரத்தில் காசோலை அனுப்புவார்கள். அது ஆகஸ்ட் 2ம் வாரத்தில் உங்கள் கைக்குக் கிடைக்கும்.
உங்கள் வலைப்பூவின் ஹிட் ரேட், வருவாய் ஒவ்வொரு மாதமும் 100$ ஈட்டுவதாக வைத்துக்கொண்டாலும் இதே விதிமுறைதான்.
ஜூன் 30 க்குள் 100$ ஐத் தொட்டபிறகு, 50 நாட்களுக்குள் உங்களுக்குப் பணம் வரவில்லை என்றால் மீண்டும் அனுப்பவும் என மறுபடி request விடலாம். முக்கியமான விசயம் : தமிழ்தளங்களில் உங்கள் கோடிங்கை சேர்த்தால் பொதுச்சேவை @ பப்ளிக் சர்வீஸ் விளம்பரமே வரும். அதை க்ளிக்கினாலும், க்ளிக்காவிட்டாலும் பைசா வரவே வராது.
எக்காரணம் கொண்டும் அவர்கள் கொடுக்கும் கோடிங்கை மாறுதல் (tampering) செய்யவே கூடாது. அவர்களது கோடிங்கை சிதைத்து ஏதேனும் மாற்றி தமிழ் தளத்தில் பயன்படுத்தினால் விளம்பரங்கள் தென்படலாம். ஆனால் அது ஆபத்துதான். அவர்களது விதிமுறையில் ஒன்றாக கோடிங்கை மாறுதல் செய்யக்கூடாது என்பது மிக முக்கியமானது.
ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சென்ஸ் அக்கவுண்டை வைத்துக்கொள்ளலாமா? முடியாது. அதாவது ஒருவர் பெயர், முகவரிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வாங்க முடியாது. வேறு பெயர், முகவரி, தொலைபேசி எண் கொடுத்து அடுத்தவர் பெயரில் வாங்கலாம்.
ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே IP வழியாக திறக்காதீர்கள். சிறு பிழை தென்பட்டாலும், இரண்டு அக்கவுண்டுகளையும் கூகிள் முடக்கிவிடும் அபாயம் உள்ளது.
தனித்தனி IP address வழியாக கையாலளாம். இப்போது எங்கே பார்த்தாலும், அலுவலகம்
அல்லாத வீட்டு இணையங்களில் dynamic IP வைத்திருப்போம். ஒவ்வொரு முறையும்
வேறு ஐபியாக செட் ஆகும். இப்போது என்ன செய்வது? இது வரை எழுதியதைப் படியுங்கள். புரியவில்லை எனில் கேளுங்கள். பிறகு இந்தக் கேள்விக்கு விடை தருகிறேன்.
அனைத்து நிரல்களுக்கும் ஒரே இடத்தில் கணினி குறுக்கு தட்டச்சு
நீங்கள் மைக்ரோசாப்ட் Word, Excel,Powerpoint அல்லது Outlook இதில் ஏதேனும் ஒரு நிரலுக்கு குறுக்கு தட்டச்சு வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள விரும்பினால் கண்டிப்பாக ஏதேனும் தேடுபொறியில் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்த குறுக்கு தட்டச்சு எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்தால் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்.
Shorcutworld.com என்னும் தளம் பெரும்பாலும் முக்கியமான நிரல்கள் மற்றும் இயங்குதளங்களுக்கு குறுக்கு தட்டச்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.