| Mobile | RSS

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு

March 13th, 2009 | 2 Comments | Posted in ஆலோசனைகள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


சிவசேனாவைப் பற்றி எதிரான கொள்கையை உடையவர் கேரளாவைச் சேர்ந்த 19 வயது அஜித்.

இவர் ஆர்க்குட் தளத்தில் சிவசேனைக்கு எதிராக ஒரு குழுமத்தை ஆரம்பித்தார்.

அதற்கு ஏராளமான பெயரில்லா மறுமொழிகள் இடப்பட்டன. இதைக் கேள்விப்பட்ட சிவசேனைக் குழுவினர் அஜித்துக்கு எதிரான குற்றத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.



மகாராஸ்ட்ரா நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி அஜித்க்கு அறிக்கை விடப்பட்டது.

கேரள உயர்நீதி மன்றத்தில் அஜித்துக்கு முன் ஜாமீன் கிடைத்தது. அவர் வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் முயன்றார்.

“அவரவர் நடத்தும் வலைப்பூக்களுக்கும், அதில் இடம்பெறும் மறுமொழி / பின்னூட்டங்களுக்கும் அவரவர்களே பொறுப்பேற்கவேண்டும்”- என உத்தரவிட்ட சுப்ரீம் நீதிமன்றம், அவரது நடத்தை பற்றி மகாராஸ்ட்ரா நீதிமன்றத்தில் சான்றிதழ் வழங்கும்படி கேட்டுள்ளது.

அவரவர் பதிவுகளின் தகவல்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் வலைப்பதிவரே பொறுப்பு.

உங்கள் வலைப்பூவில் ஒரு வாசகத்தைப் போட்டுவிடுங்கள் : “அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை”.

Leave a Reply 438 views, 2 so far today |
Tags: ,
  • No Related Post
Follow Discussion

2 Responses to “வலைப்பதிவர்கள் கவனத்திற்கு”

  1. ராகவன் Says:

    மிக்க நன்றி நண்பரே.

  2. தமிழ்நெஞ்சம் Says:

    Thanks to : ராகவன்




© 2008 - 2010 Tamil Tech Information.