இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்க்கு
ADVERTISEMENTபெரும்பாலும் வலைப்பதிவு உலகில் எல்லோரும் இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்பீர்கள். ஆனால் சில திருடர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வங்கியில் இருந்து அனுப்பவதை போன்று மின்ன்ஞ்சலை அனுப்புவார்கள். அதை எப்படி கண்டுபிடிப்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
திருடன் அனுப்பிய போலியான மின்னஞ்சல்

அனுப்புநர் என்ற இடத்தில் : <securityalert@hdfcbank.com> என்ற மின்னஞ்சல் முகவரி உள்ளது, இதை பார்த்த பயணாளர்கள் இது உன்மையான மின்னஞ்சல் முகவரியில் இருந்து வந்துள்ளது என்று என்னி அந்த மின்னஞ்சலில் உள்ள தகவல்களும் உன்மை என நம்ப வைக்கப்படுகின்றனர்.
ஆனால் mailed by : gator125.hostgator.com என்ற பிரபல வழங்கியல் (Web Hosting) நிறுவனத்தில் உள்ள ஒரு பயணாளர் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த mailed by : என்ற தெரிவை மின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள் தருவார்கள் நீங்கள் மின்னஞ்சலை படிக்கும் போது (Show Details ) அல்லது (Full Header) என்று தெரிவை தேர்ந்தெடுத்து தெரிந்து கொள்ளலாம்.
வங்கியில் இருந்து அனுப்பட்ட உன்மையான மின்னஞ்சல்

வங்கியில் இருந்து அனுப்பட்ட மின்னஞ்சலில் mailed by : என்ற இடத்தில் வங்கியின் இனையதள முகவரி இருக்கும். இந்த தெரிவை வைத்து போலியான மின்ன்ஞ்சலை கண்டுபிடித்துவிடலாம்.




March 25th, 2009 at 7:43 am
Good Post..Thanks
March 25th, 2009 at 8:47 am
அவசியமான தகவல்.
தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு தகவல்களை வழங்குங்கள்.
வாழ்த்துக்கள்
March 25th, 2009 at 2:23 pm
எந்த வங்கியும் தொலை பேசியிலோ அல்லது ஈ-மெயில் மூலமாகவோ உங்களின் இணைய பரிவர்த்தனை-க்கான சீக்ரெட் பாஸ்வோர்டை கேட்கவே மாட்டாங்க!
நாங்கல்லாம் கிரெடிட் கார்டு பில்-ல்லுக்கான ஈ மெயிலையே ஓபன் பண்றதில்லை. இதுல இந்த கிரகம் வேற….