கணினிப் பிழைகளுக்கான தேடுபொறி – ஒரு ஆய்வு
ADVERTISEMENTஇந்த பூமியில் மனிதனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மென்பொருளுமே (software application) பிழைகள், தவறுகளுடன் (bugs) வருபவைதான். பின்னர் ஒவ்வொரு பிழையாகக் களையப்பட்டு (bug fixing) அடுத்தடுத்த வெளியீடுகள் வெளியிடப்படும்.
இது யாவரும் அறிந்ததே!
ஒவ்வொரு பிழைக்கும் அதற்கான பிழைஎண் உண்டு. அதற்கு error code என்று பெயர்.
அந்த எண்ணை குறிப்பிட்ட இணையத் தளத்தில் கொடுத்தால் அதைப்பற்றிய அந்தப் பிழைச்செய்தி பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெற இயலும்.
இந்த பிழைச்செய்தியை கூகிள் தேடுபொறி (search engine)யிடம் கொடுத்தால் அது உங்களை மயக்கத்தில் தள்ளிவிடும் அபாயம் உண்டு.
பிழைச்செய்தி குறித்த மேலதிகத் தகவல்களை துல்லியமாகக் கண்டறிவதற்காகவே ஒரு இணையத்தளம் இருக்கிறது.

Error Search and Collaboration
நம்பகமான, நம்பிக்கையான தகவல்களை இந்தத் தளத்தில் பெறலாம்.
ஏராளமான மென்பொருள் பயன்பாடுகளுக்கான பிழைக்குறியீட்டு எண் மற்றும் அதுகுறித்த தகவல்கள் அனைத்தையும் ஒரு தரவுத்தளத்தில் (database) ஏற்றியுள்ளனர். ஒரு சிறிய தேடலில் விரல் நுனியில் அறிக்கைகள் கிடைக்கின்றன. இதற்காக அவர்களே ஒரு நெருப்பு நரிக்கான நீட்சியையும் (Firefox Add on) வெளியிட்டுள்ளனர்.
இணையத் தளம் : http://www.bug.gd
உதாரணம்:
இந்தத் தளத்தில் 404 என்கிற எண்ணை உள்ளிட்டுப் பாருங்கள். இணையப் பக்கத்தைக் காணவில்லை என்பதாக அறிக்கை காட்டும்.




March 30th, 2009 at 1:48 am
மிக மிக நல்ல தகவல் நன்றி தம்பி
March 30th, 2009 at 1:55 am
Thanks to : buruhani
March 30th, 2009 at 11:47 am
Good info.. tx for sharing with us